பரமக்குடி : நயினார்கோவிலில் மாடுகளை கடத்திச் செல்ல முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனையூர் கிராம காட்டுப்பகுதியில் மாடுகள் உள்ளன. இவற்றை சிலர் வேட்டையாடினர். கிளியூர் - பி.கொடிக்குளம் செல்லும் சாலையில்சிலர் மாடுகளை கடத்திச் சென்றனர். நயினார்கோவில் எஸ்.ஐ., சரவண குமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது வாகனத்தை மறித்து விசாரித்தனர். இரண்டு மாடுகளை கட்டி வைத்துக் கொண்டு சென்றது தெரிந்தது.தப்பியோட முயன்ற ஏர்வாடி தர்கா பகுதியைசேர்ந்த ஷேக் முகம்மது38, கருப்புசாமி 27, முருசல்இப்ராஹிம் 22, பொட்டகவயல் செய்யது இப்ராகிம் 38, ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE