பொது செய்தி

தமிழ்நாடு

232 உதவியாளர்கள் பதவி உயர்வில் சிக்கல்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிகளுக்காக, 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், 250 அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை. இவர்களுக்கு பதிலாக, உதவியாளர்கள், பொறுப்பு சார் - பதிவாளர்களாக செயல்படுகின்றனர்.இந்நிலையில், உதவியாளர்களை, இரண்டாம் நிலை சார் - பதிவாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதிலிருந்த சட்ட சிக்கல்கள் நீங்கி உள்ள நிலையில், பதவி

சென்னை:தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிகளுக்காக, 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், 250 அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை. இவர்களுக்கு பதிலாக, உதவியாளர்கள், பொறுப்பு சார் - பதிவாளர்களாக செயல்படுகின்றனர்.

இந்நிலையில், உதவியாளர்களை, இரண்டாம் நிலை சார் - பதிவாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதிலிருந்த சட்ட சிக்கல்கள் நீங்கி உள்ள நிலையில், பதவி உயர்வு வழங்க, பதிவுத் துறை நிர்வாகம் முன்வந்துள்ளது.இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:தற்போதைய நிலவரப்படி, 232 உதவியாளர்கள், இரண்டாம் நிலை சார் - பதிவாளர்களாக தகுதி பெறுகின்றனர்.

இவர்கள் பதவி உயர்வு பெற்றால், 250 அலுவலகங்களில், பொறுப்பு சார் - பதிவாளர்களாக உள்ள உதவியாளர்கள், பழைய நிலைக்கு செல்ல வேண்டி இருக்கும்.இதன் காரணமாக, உதவியாளர்களில் ஒரு பிரிவினர், ௨௩௨ பேரின் பதவி உயர்வை, தடுக்க முயற்சி செய்கின்றனர். இது, பதிவுத் துறை அதிகாரிகள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X