மதுரை : மதுரை மாவட்டத்தில் அரசு புறம்போக்கிலுள்ள 27 கல் குவாரிகளை ஜன., 20 காலை 11:00 மணிக்கு பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முறைகேடு புகார்களையடுத்து இம்மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.அரசு, தனியார் பயன்பாட்டிற்காக கல்குவாரிகள் மட்டும் ஏலம் விடப்படுகிறது. கடந்தாண்டு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச குத்தகை தொகை அதிகம் இருப்பதாக கூறி ஒப்பந்ததாரர்கள் குவாரிகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை.இந்நிலையில் வாடிப்பட்டி தாலுகாவில் 14, மேலுார் தாலுகாவில் 13 கல் குவாரிகளை ஏலம் விட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான மூடி முத்திரையிடப்பட்ட உறைகள் கொண்ட விண்ணப்பங்கள் ஜன., 19 மாலை 5:00 மணி வரை மதுரை கலெக்டர் அலுவலக சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையில் பெறப்படுகிறது. ஜன., 20 காலை 11:00 மணிக்கு டெண்டர் இணைந்த ஏலம் நடக்கவுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE