பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை விவசாயம் கற்றுக்கொள்ளுங்கள்! சத்குரு பொங்கல் வாழ்த்து

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பேரூர் : 'தமிழகம் முழுதும் படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயம் கற்று, பிறருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்' என, சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.பொங்கல் வாழ்த்து செய்தியில், ஈஷா நிறுவனர் சத்குரு கூறியுள்ளதாவது:தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். பொங்கல் பண்டிகை, விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட விழா. இந்நாளில், படித்தவர்களும்,
 இயற்கை விவசாயம் கற்றுக்கொள்ளுங்கள்! சத்குரு பொங்கல் வாழ்த்து

பேரூர் : 'தமிழகம் முழுதும் படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயம் கற்று, பிறருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்' என, சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொங்கல் வாழ்த்து செய்தியில், ஈஷா நிறுவனர் சத்குரு கூறியுள்ளதாவது:தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். பொங்கல் பண்டிகை, விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட விழா. இந்நாளில், படித்தவர்களும், இளைஞர்களும் கிராமங்களுக்கு சென்று, விவசாயம் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

நீங்கள் விரும்பினால், ஈஷா விவசாய இயக்கத்தின் வாயிலாக, இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். அதை கற்றுக்கொண்டு, கிராமங்களில் குறைந்தபட்சம், 10 பேருக்காவது சொல்லி கொடுங்கள். அப்படி செய்தால், நாட்டில் பெரும் புரட்சியே நடந்து விடும்.

நீங்கள் சாப்பிடும் அன்னத்தால் தான், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் வருவதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். இதை, நாம் மாற்ற வேண்டும். நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் இயற்கை முறையில் விளைவிக்க வேண்டும். இயற்கையை நல்ல நிலையில் வைத்து கொள்ள, இது மிக தேவையானது.

இதை, தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் உறுதியை, தமிழ் மக்கள் அனைவரும் இந்த பொங்கல் திருநாளில் எடுக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இந்த உறுதியை கட்டாயம் எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X