பொது செய்தி

தமிழ்நாடு

மண்டல போக்குவரத்து அலுவலக வளாகங்களில் தண்ணீர் தேக்கம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போக்குவரத்து பணிமனை அலுவலகம், ஆயுதப்படை மைதானம், வட்டாரபோக்குவரத்து அலுவலகம் மற்றும் நகரிலுள்ள தாலுகா அலுவலகம், கும்பகோணம், காரைக்குடி மண்டல போக்குவரத்து அலுவலக வளாகங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மழைநீரை கடத்துவதற்காக உள்ள வாய்க்கால் சரிவர பராமரிக்கப்படாமல் சேதுபதிநகர்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போக்குவரத்து பணிமனை அலுவலகம், ஆயுதப்படை மைதானம், வட்டாரபோக்குவரத்து அலுவலகம் மற்றும் நகரிலுள்ள தாலுகா அலுவலகம், கும்பகோணம், காரைக்குடி மண்டல போக்குவரத்து அலுவலக வளாகங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மழைநீரை கடத்துவதற்காக உள்ள வாய்க்கால் சரிவர பராமரிக்கப்படாமல் சேதுபதிநகர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலி இடங்களில் தண்ணீர் தேங்கிகிடக்கிறது.இதேப்போல ராமேஸ்வரம் ரோடு, சின்னக்கடை, சிவஞானபுரம் ரோடு, சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் தற்போதைய மழைக்கு சேறும் சகதியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.மழை காரணமாக நகராட்சியில் 23 ஊரணிகளில் 8 நிரம்பியுள்ளன, மற்றவைகள் நிரம்பி வருகின்றன. ரோட்டை செப்பனிடவும், தண்ணீர் தேங்கியுள்ளதை அகற்ற நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X