திருப்பூர் : பத்திரப்பதிவு துறையில், 1.33 கோடி ரூபாய் அளவுக்கு ரசீது முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், இதுவரை, 84.71 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட பதிவுத்துறை ஜாயின்ட் -1 மற்றும் 2 அலுவலகங்கள் உட்பட, ஆறு சார் - பதிவாளர் அலுவலகங்களில் 'ஆன்லைன்' ரசீது முறைகேடு, சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. ஆறு அலுவலகங்களில், 68 லட்சத்து, 70 ஆயிரத்து, 657 ரூபாய் கையாடல் நடந்தது.இதுதொடர்பாக, இணை சார்-பதிவாளர்கள் உட்பட, எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக, பதிவுத்துறையின் கூடுதல் ஐ.ஜி., நல்லசிவன் தலைமையில் விசாரணை நடந்தது.
மாநிலம் முழுவதும், ஒரு கோடியே, 33 லட்சத்து, 74 ஆயிரத்து, 201 ரூபாய் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, எட்டு பேர் உட்பட, 19 பேருக்கு '17பி சார்ஜ்' வழங்கப்பட்டு பத்திரப்பதிவு துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பதிவுத்துறை தலைவர் சங்கரிடம் கேட்டதற்கு, ''ரசீது முறைகேடு தொடர்பாக, திருப்பூர், ஈரோடு உட்பட, 23 சார்-பதிவாளர் அலுவலகங்களில் இருந்து, 84 லட்சத்து, 71 ஆயிரத்து, 489 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. இன்னும், 49 லட்சத்து, இரண்டாயிரத்து, 712 ரூபாய் மீட்க வேண்டும். விசாரணை தொடர்கிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE