ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கேட்டைக்கரை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆனந்துார் பகுதியில் ரோடு துண்டிக்கப்பட்டு 70க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்இருந்து மேல்பனையூர்விலக்கு வழியாக ஆனந்துார் செல்வதற்கு பஸ் வசதி உள்ளது. இந்த சாலை வழியாக சிவகங்கை மாவட்ட பகுதியான சருகனி, தேவகோட்டை பகுதிக்கு செல்ல முடியும். கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கோட்டக்கரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த வெள்ள பெருக்கு பனிக்கோட்டை ஆறு மூலமாக இந்த ரோட்டை கடந்து செல்கிறது.பனிக்கோட்டை தரை பாலத்தில் நேற்று முதல் மழைநீர் அதிகமாக செல்கிறது.
இந்த தரைப்பாலத்தின்இருபுறமும் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இப்பகுதியை கடக்க முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.முன்பு இந்த பனிக்கோட்டை ஆற்றில் 2005 டிசம்பரில் இது போன்று காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அதிகரித்ததில் சனவேலி ஆற்று பாலத்தில்,அரசு பஸ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பஸ் கவிழ்ந்து 49 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE