அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தவ வாழ்க்கை வாழ்ந்த சசிகலா'

Added : ஜன 14, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:''சசிகலா தவ வாழ்க்கை வாழ்ந்தவர்,'' என, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார்.முதல்வரையும், சசிகலாவையும் தரக்குறைவாக பேசிய, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதியை கண்டித்து,சென்னையில் பல்வேறு இடங்களில், அ.தி.மு.க., மகளிரணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அண்ணாநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்றார். பின்,

சென்னை:''சசிகலா தவ வாழ்க்கை வாழ்ந்தவர்,'' என, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார்.முதல்வரையும், சசிகலாவையும் தரக்குறைவாக பேசிய, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதியை கண்டித்து,சென்னையில் பல்வேறு இடங்களில், அ.தி.மு.க., மகளிரணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அண்ணாநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்றார். பின், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உதயநிதி மிகவும் தரக்குறைவாக, முதல்வரை பேசியுள்ளார். பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் பேசி உள்ளார். கருணாநிதி குடும்பம், பெண்களை எந்த நிலையில் வைத்துள்ளது என்பதை, உதயநிதி பேச்சு காண்பிக்கிறது.சசிகலா, ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர்.

அவர் எங்கிருந்தாலும், மரியாதைக்குரிய வகையில் போற்றக்கூடியவர். அவரையும், ஜெயலலிதாவையும், இவ்வாறு பேசியதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவுடன் இருந்து, தவ வாழ்க்கை வாழ்ந்தவர்.ஒரு பெண்ணை இப்படி பேசுவதை, யாராலும் ஏற்க முடியாது. அனைத்து தரப்பினரும், உதயநிதி பேச்சுக்கு, கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
14-ஜன-202119:26:18 IST Report Abuse
RajanRajan தவ வாழ்க்கை பற்றி இவங்களுக்கு என்ன தெரியும். செத்தால் தான் சுடுகாடு தெரியும் எனும் பழமொழி தான் நினைவுக்கு வருது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-ஜன-202119:24:53 IST Report Abuse
RajanRajan தவ வாழ்க்கைக்கு சிறை தான் சிறந்தது என்று சொல்லி சின்னத்தாயி வாழ்க்கை சிறையிலே முடிந்துடுமோ என்னவோ. கோகுலாஷ்டமி வார்த்தை பலிக்கவும்.
Rate this:
Cancel
Ramachandran V - Chennai,இந்தியா
14-ஜன-202117:07:56 IST Report Abuse
Ramachandran V இவங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X