பொது செய்தி

தமிழ்நாடு

மலட்டாறு குறுக்கே தடுப்பணைஉயரத்தை அதிகரிக்க கோரிக்கை

Added : ஜன 14, 2021
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரம் மலட்டாற்றில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் பெருக்கெடுக்கும் காட்டாற்று மழை நீரை சேமிக்க இயலாமல் வீணாக மூக்கையூர் முகத்துவார வழித்தடத்தில் கலந்து கடலுக்கு செல்கிறது. பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் நபார்டுவங்கி நிதி உதவித்திட்டம் 2018--19 ஆண்டுக்கான குண்டாறு (மலட்டாறு) ஆற்றின் குறுக்கே தடுப்பணை

சாயல்குடி : சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரம் மலட்டாற்றில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் பெருக்கெடுக்கும் காட்டாற்று மழை நீரை சேமிக்க இயலாமல் வீணாக மூக்கையூர் முகத்துவார வழித்தடத்தில் கலந்து கடலுக்கு செல்கிறது.

பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் நபார்டுவங்கி நிதி உதவித்திட்டம் 2018--19 ஆண்டுக்கான குண்டாறு (மலட்டாறு) ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2019 பிப்., 25 அன்று முதல் தற்போது வரை பணிகள் நடந்து வருகிறது. ஒப்பந்தகாலம் 12 மாதங்கள் மதிப்பீட்டு தொகை ரூ.317.70 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மலட்டாற்றிலேயே மணல் தோண்டப்பட்டு, முழு கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.விவசாயிகள்கூறியதாவது:கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு பயன்படும் வகையில் கமுதி குண்டாற்றில் பிற தடுப்பணையில் இருந்து வெள்ள காலங்களில் வழிந்தோடும் மழைநீர் மலட்டாற்றின் வழியாக மூக்கையூர் கடல் முகத்துவாரத்தில் கலக்கிறது. விவசாய சங்கங்கள், கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது.

மழைக்கு நிரம்பிய காட்டாற்று வெள்ளம் உயரம் குறைவான திட்ட மதிப்பீட்டால் உபரிநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.தடுப்பணையை சுற்றி வடக்குப்பகுதியில் அகற்றப்படாமல், நீர் தேங்கும் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. மலட்டாற்றின் ஆரம்ப வழித்தடம் துார்வாரப்படாமல், பெயரளவிற்கு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது, என்னர்.தீர்வு: தடுப்பணையின் உயரத்தை கூடுதலாக 7 அடிக்கு உயர்த்திடவும், தரமான கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு குறித்த காலத்தில் நிறைவு செய்யவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X