பொது செய்தி

இந்தியா

நாளை துவங்குகிறது பார்லி., கட்டுமான பணி

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டட கட்டுமான பணி நாளை (ஜன.,15) துவங்குகிறது.டில்லியில் தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம் 94 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இடப்பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களினால் அதன் அருகிலேயே 971 கோடி ரூபாய் செலவில் புதிய பார்லி கட்டடம், தலைமை செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லம், துணை ஜனாதிபதிக்கான புதிய இல்லம்
New parliament building, construction, heritage panel

புதுடில்லி : டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டட கட்டுமான பணி நாளை (ஜன.,15) துவங்குகிறது.

டில்லியில் தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம் 94 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இடப்பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களினால் அதன் அருகிலேயே 971 கோடி ரூபாய் செலவில் புதிய பார்லி கட்டடம், தலைமை செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லம், துணை ஜனாதிபதிக்கான புதிய இல்லம் கட்டவும் மூன்று கி.மீ. தொலைவிலான ராஜபாதையின் மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்கான கட்டுமான பணி ஒப்பந்தம் 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி புதிய பார்லி கட்டட கட்டுமானப் பணிகளுக்கான புராதன கட்டட பாதுகாப்பு கமிட்டியின் ஒப்புதல் ஜன., 11ல் கிடைத்தது. இந்நிலையில் புதிய பார்லி.யின் கட்டுமான பணிகள் நாளை துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



வட மாநிலங்களில் தை மாத பிறப்பு மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதன் முதல் சூரிய உதய தினம் நல்ல காரியங்களை துவங்குவதற்கு உகந்த நாளாக கருதப்படுவதால் கட்டுமானப் பணிகளை நாளை முதல் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை 10 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பு புணரமைக்கப்பட்ட ராஜபாதையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
14-ஜன-202114:14:52 IST Report Abuse
Elango இந்தியாவில் கோடி கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவிற்காக தவித்து வருகின்றனர்.... பல ஆய்ரம் கோடி செலவில் இந்த பார்லிமென்ட் இப்ப எதற்கு...இப்ப இருக்க பார்லிமென்டில் கூட்டம் கூட்ட இந்த அரசு தயங்குது புதுசு இப்ப எதுக்கு சார்...ஓ இங்க தூக்கம் அங்க சாப்பாடு சூப்பர்....
Rate this:
Cancel
Indian-இந்தியன் - M City,இந்தியா
14-ஜன-202114:00:43 IST Report Abuse
Indian-இந்தியன் மகிழ்ச்சி.....
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
14-ஜன-202110:38:42 IST Report Abuse
கொக்கி குமாரு மோடிஜியின் ஆட்சியில் கட்டப்படவிருக்கும் பாராளுமன்றத்தை பார்க்கவும். எவ்வளவு அருமையான டிசைனாய் ஜொலிக்கிறது. இப்போது, திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி கட்டி கொடுத்த மிக பெரிய தண்ணீர் சுட வைக்கும் சட்டசபை அண்டாவை பார்க்கவும். யார், ஊழல் கரை படியாத தலைவர் என்று உங்களுக்கே புரியவரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X