ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகே மரத்தின் கிளை முறிந்ததில் ராமேஸ்வரம் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் மூன்று நாட்களாக பலத்த மழை பெய்கிறது. அரசு மருத்துவமனை அருகே 25 ஆண்டு பழமையான வாகை மரத்தின் கிளைகள் காலை 11:00 மணிக்கு முறிந்து ரோட்டில் விழுந்தது.மின் கம்பிகளும் துண்டிக்கப்பட்டன.மதுரை, ராமேஸ்வரம் செல்லும் பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் மாற்று வழியில் நெரிசலில் திணறினர்.தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றினர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE