பொது செய்தி

தமிழ்நாடு

மழை நிவாரண பணி 3 மந்திரிகள் நியமனம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
சென்னை:தென் மாவட்டங்களில் மழை நிவாரண பணிகளை துரிதப்படுத்த, மூன்று அமைச்சர்களுக்கு, முதல்வர் பழனிசாமி.,உத்தரவிட்டுள்ளார். 'பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், இழப்பீட்டு தொகை வழங்கப்படும்' என்றும், அறிவித்துள்ளார்.முதல்வர் அறிக்கை:நடப்பு ஜனவரி மாதத்தில், இதுவரை பெய்ய வேண்டிய, இயல்பான மழை அளவான, 10.2 மி.மீ.,க்கு, மிக அதிகமாக, 108.7 மி.மீ., மழை பெய்துள்ளது.இதனால், கடலுார்,

சென்னை:தென் மாவட்டங்களில் மழை நிவாரண பணிகளை துரிதப்படுத்த, மூன்று அமைச்சர்களுக்கு, முதல்வர் பழனிசாமி.,உத்தரவிட்டுள்ளார். 'பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், இழப்பீட்டு தொகை வழங்கப்படும்' என்றும், அறிவித்துள்ளார்.

முதல்வர் அறிக்கை:நடப்பு ஜனவரி மாதத்தில், இதுவரை பெய்ய வேண்டிய, இயல்பான மழை அளவான, 10.2 மி.மீ.,க்கு, மிக அதிகமாக, 108.7 மி.மீ., மழை பெய்துள்ளது.இதனால், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பொது மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை, தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உதவிகளை செய்து தரும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், தற்போது மழை அதிகம் உள்ளதால், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார். செய்தித் துறை அமைச்சர் ராஜு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோருக்கு, அந்த மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அறுவடை நிலையில் இருந்த நெற்பயிர்களும், இதர பயிர்களும், அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை கருத்தில் வைத்து, பாதிக்கப்பட்ட வயல்களில், போர்க்கால அடிப்படையில், கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள, வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, மழையால் பாதிக்கப்பட்ட, அனைத்து விவசாயிகளுக்கும், இழப்பீட்டுத் தொகை விரைவில் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X