சென்னை:தேர்தல் நடக்காத உள்ளாட்சி அமைப்புகளில், தனி அலுவலர்களின் பதவிக்காலம், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்வான பிரதிநிதிகள், 2020 ஜனவரி, 6ல் பதவியேற்றனர்.
கொரோனா நோய் பரவலை தொடர்ந்து, புதிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அதேபோல, அனைத்து மாவட்டங்களிலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தேர்தல் நடத்தப்படவில்லை. இவற்றின் தனி அலுவலர்கள் பதவிக்காலம், டிசம்பர், 31ம் தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, தனி அலுவலர்களின் பதவிக்காலம், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE