மதுரை : மதுரை விவசாய கல்லுாரி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மசாலா பொடி வகைகள் தயாரிப்பது குறித்த 3 நாட்கள் பயிற்சி நடந்தது.
துவக்கவிழாவிற்கு சமுதாய கல்லுாரி முதல்வர் அமுதா தலைமை வகித்தார். ேஹமக்கண்ணன் புட்ஸ் உரிமையாளர் ேஹமாமாலினி அசைவ உணவுகளுக்கான பொடி வகைகள் தயாரிப்பு குறித்து செயல்விளக்கமளித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையரிடமிருந்து உரிமம் பெறுவதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி பேசினார்.2ம் நாளில் உழவன் உணவக செயலாளர் பாலாஜி பிரியாணி மசாலா பொடி வகைகள் தயாரிப்பு குறித்தும், சீத்தாலட்சுமி சாம்பார் மற்றும் சைவ பொடி வகைகள் தயாரிப்பு குறித்தும் விளக்கினர்.
3ம் நாளில் தொழில் மைய பொதுமேலாளர் ராமலிங்கம் தொழில் முனைவோருக்கான திட்டங்கள், எம்.எஸ்.எம்.இ பயிற்சியாளர் ராஜ்குமார் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது குறித்து பேசினர். விவசாய கல்லுாரி பேராசிரியர்வன்னியராஜன் சான்றிதழ் வழங்கினார். உதவி பேராசிரியை ஆரோக்கியமேரி ஏற்பாடுகளை செய்தார். உதவி பேராசிரியை உஷாராணி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE