மதுரை : “ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும்,” என, சி.இ.ஓ., சுவாமிநாதன் தெரிவித்தார்.
மாவட்ட அளவில்அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்கூட்டம் சி.இ.ஓ., தலைமையில் நடந்தது. டி.இ.ஓ.,க்கள் முத்தையா, இந்திராணி, வளர்மதி, பங்கஜம், மாநகராட்சி கல்வி அதிகாரி விஜயா முன்னிலை வகித்தனர்.சி.இ.ஓ., பேசியதாவது:கொரோனா தாக்கத்திற்குபின் வரும் 19ல் பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. ஒரு வகுப்பறையில் 25 மாணவர் மட்டும் அனுமதிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் சானிடைசர்ஸ் வசதி கட்டாயம் செய்திருக்க வேண்டும்.இறைவணக்கம், உடற்கல்வி, என்.எஸ்.எஸ்., மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.
அடிக்கடி தொட்டு பயன்படுத்தப்படும் கதவு, ஜன்னல், கைபிடிகளுக்கு அடிக்கடி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். சுகாதாரத் துறையினருடன் இணைந்து மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் சின்னதுரை, ரகுபதி ஆகியோர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.----'கவர்' பிரச்னையை எழுப்பியதலைமையாசிரியர்கள்தலைமையாசிரியர் சிலர் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 'கோவிட் 19' தடுப்பு பொருட்களை வாங்க கோரி ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனம் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியருக்கு பணம் வைத்து 'கவர்' தருகின்றனர்அதை வாங்கலாமா. நேர்மையான தலைமையாசிரியருக்கு இது சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றனர்.
அதற்கு "பள்ளி மேலாண்மை மற்றும்வளர்ச்சி குழு விவாதித்து வழக்கம் போல் தீர்மானம் நிறைவேற்றி மட்டுமே அப்பொருட்கள் கொள்முதல் செய்ய வேண்டும்" என சி.இ.ஓ., பதில் அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE