பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளியுடன் தேர்தல் 1,000 வாக்காளர்களுக்கு ஒரு பூத்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
சமூக இடைவெளியுடன் சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக, 1,000 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என பிரிக்கும் பணி, மும்முரமாக நடக்கிறது.கிராமப்புறத்தில், 1,200 வாக்காளர்களுக்கும், நகர்ப்புறத்தில், 1,400 வாக்காளர்களுக்கும் ஒரு ஓட்டுச்சாவடி இருந்தது. ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவி, 'விவிபேட்' இடம் பெற்றதை அடுத்து, கடந்த லோக்சபா தேர்தலில், 1,500 பேருக்கு, ஒரு ஓட்டுச்சாவடி என

சமூக இடைவெளியுடன் சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக, 1,000 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என பிரிக்கும் பணி, மும்முரமாக நடக்கிறது.

கிராமப்புறத்தில், 1,200 வாக்காளர்களுக்கும், நகர்ப்புறத்தில், 1,400 வாக்காளர்களுக்கும் ஒரு ஓட்டுச்சாவடி இருந்தது. ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவி, 'விவிபேட்' இடம் பெற்றதை அடுத்து, கடந்த லோக்சபா தேர்தலில், 1,500 பேருக்கு, ஒரு ஓட்டுச்சாவடி என பிரிக்கப்பட்டது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, வரும் சட்டசபை தேர்தலில், முதல் கட்டமாக, 1,000 வாக்காளர்கள் இடம்பெறும் வகையில், ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்படுகின்றன. சட்டசபை தொகுதி வாரியாக, ஓட்டுச்சாவடி பிரிக்கும் பணி வேகம் எடுத்துள்ளது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'சமூக இடைவெளியுடன், சட்டசபை தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 'அதிக வாக்காளர் உள்ள சாவடிகள், ஆண் மற்றும் பெண் சாவடிகள் என்று பிரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், 800 முதல், 900 ஓட்டுச்சாவடிகள் வரை எண்ணிக்கை உயரும். 'புதிய வாக்காளர் எண்ணிக்கையை சரிபார்த்து, ஓட்டுச்சாவடி பிரிக்கப்படும்' என்றனர்.இளம் வாக்காளர்கள்தமிழகத்தில், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் அனைவரையும், பட்டியலில் விடுபடாமல் சேர்க்க, தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டி வருகிறது.

அதிகாரிகள் கூறியதாவது:கல்லுாரி மாணவர்களை, வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்கும் வகையில், பெரும்பாலான கல்லுாரிகளில், மாணவ துாதுவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 'ஆன்லைன்' மூலமாகவும், மாணவர்களை வாக்காளராக சேர்க்கும் வழிமுறை குறித்து, இவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், சிறப்பு பரிசுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய மாணவர்கள் பலர், தங்கள் வசிப்பிடங்களில் நடக்கும் முகாம் மூலம், புதிய வாக்காளராக சேர்ந்துள்ளனர். இளம் வாக்காளர்கள், 100 சதவீதம் விடுபடாமல் சேர்க்கப்பட வேண்டும் என்பதே, தேர்தல் ஆணையத்தின் நோக்கம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X