ராமநாதபுரம் : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.14.20 லட்சம் மோசடி செய்த அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீது ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாம்பு விழுந்தான் பகுதியை சேர்ந்த முகமது அலி மகன் சையத் கனி. இவருக்கு அரியானா மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவர் முகநுால் மூலம் அறிமுகமாகி உள்ளார். இருவரும் பழகிய நிலையில் அவர் அழைத்ததின் பேரில் டில்லி வரை சென்று வந்துள்ளார்.இந்நிலையில் தனது நண்பர்கள் 6 பேர் அயர்லாந்து நாட்டில் நல்ல வேலையில் இருப்பதாகவும்,நன்றாக சம்பாதிப்பதாகவும் ரஞ்சித்சிங் கூறியுள்ளார். அவர்களையும் பேச செய்துள்ளார்.
சையத் கனிக்கும் அயர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2019 அக். முதல் நவ.16 வரைரூ.14 லட்சத்து 20 ஆயிரம் பெற்றார்.ஆனால் வேலை வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை தராமலும் ஓராண்டிற்கும் மேலாக ஏமாற்றியுள்ளார். இதையடுத்து சையத் கனி புகாரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் ரஞ்சித்சிங் மீது வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE