சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜன.29ல் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் உண்ணாவிரதம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
வேடசந்துார், : சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய அடையாள உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாக, மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தெரிவித்தார். மத்தியில் காங்., ஆட்சி யின்போது 1.4.2003 முதல் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது.இதனால் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்தன. எனவேபுதிய

வேடசந்துார், : சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய அடையாள உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாக, மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தெரிவித்தார்.

மத்தியில் காங்., ஆட்சி யின்போது 1.4.2003 முதல் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது.இதனால் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்தன. எனவேபுதிய பென்ஷன் திட்டத்தை (சி.பி.எஸ்.,) ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையேசெயல்படுத்த வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சிபிஎஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் வரும் 29 ல், மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை உள்ளிட்ட 20 மண்டலங்களில் ஒரு நாள் அடையாளஉண்ணாவிரதம் நடக்க உள்ளது.

மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இப்பிரச்னை குறித்து அறிய 2016ல் வல்லுநர் குழு ஒன்றை நியமித்தார். அந்தக்குழு தனது அறிக்கையை தமிழகஅரசிடம் தாக்கல் செய்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை எந்த அறிவிப்பும் வெளி வரவில்லை. இந்த அரசு தேர்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழையஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X