ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் கோரிக்கை மனுவை ஏற்க மறுத்த இணை ஆணையரை கண்டித்து, கோயில் ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முதுநிலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் பணியாளர்களின் பணிமூப்பு, பதவி உயர்வு, தேர்வு நிலை உள்ளிட்ட குறைகளை சரி செய்ய பணிப்பிரிவு இடத்தில் தகுதி வாய்ந்த ஊழியரை நியமிக்க வேண்டும். கோயில் பணியாளர்களை முக்கிய சன்னதி, கருவூலம்,சிலைகள் இருக்கும் இடத்தில் பொறுப்பாக செயல்படவும், தவறும்பட்சத்தில் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வகையில் பல ஆண்டுகளாக கோயில் பாரா பணியாளர்களை நியமிக்க வேண்டும். சுவாமி, அம்மன் சன்னதியில் 11 குருக்கள் பணியில்இருக்க வேண்டும். ஆனால் தற்போது 5 குருக்கள் உள்ளனர்.
இவர்களுக்கும் சில சமயத்தில் சொந்த விடுப்பில் செல்லும் போது பூஜை, அபிேஷகம் தடை ஏற்படுவதை தடுக்க, கீழ்நிலை பணியில் உள்ள குருக்களை பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்' உள்ளிட்ட 8 கோரிக்கை அடங்கிய தீர்மானம் நிறைவேற்றினர்.இம்மனுவை பணியாளர்கள் நேற்று, கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் கொடுத்த போது, அதனை வாங்க மறுத்துள்ளார் இதனை கண்டித்து கோயில் அலுவலகம் முன் 66 பணியாளர்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின் ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார் சமரச பேச்சு நடத்தியதும், மனுவை இணை ஆணையர் கல்யாணி பெற்று கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE