சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறுந்து கிடந்த மின் கம்பி: சகோதரர்கள் பலி

Added : ஜன 14, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:வாய்க்காலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அண்ணன், தம்பி, மின்சாரம் தாக்கி பலியாயினர். தஞ்சாவூர், மறவக்காட்டில் உள்ள வாய்க்காலில், ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு, பயன்படாத மின் கம்பத்தை போட்டு, மக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் அருகே, புதிதாக மின் கம்பம் நடப்பட்டு, வாய்க்காலை கடந்து மின் கம்பிகள் செல்கின்றன. நேற்று மழையின்

தஞ்சாவூர்:வாய்க்காலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அண்ணன், தம்பி, மின்சாரம் தாக்கி பலியாயினர்.

தஞ்சாவூர், மறவக்காட்டில் உள்ள வாய்க்காலில், ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு, பயன்படாத மின் கம்பத்தை போட்டு, மக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் அருகே, புதிதாக மின் கம்பம் நடப்பட்டு, வாய்க்காலை கடந்து மின் கம்பிகள் செல்கின்றன. நேற்று மழையின் காரணமாக, வாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பழைய மின் கம்பத்தின் மீது, மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது.

இது குறித்து, மின் வாரிய லைன்மேன் சித்ரவேல், 43 என்பவரிடம், கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர். அவர் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் - முத்துலெட்சுமி தம்பதியின் மகன்கள் தினேஷ், 12; கவுதம், 10, ஆகிய இருவரும், நேற்று காலை, 9:30 மணியளவில், ஆடுகளுக்கு தழை பறிக்க, வாய்க்காலை கடந்து சென்றுள்ளனர். அப்போது, அறுந்த கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மதுக்கூர் போலீசார் விசாரித்து, பணியில் அலட்சியமாக இருந்ததாக, லைன்மேன் சித்ரவேலை கைது செய்தனர்.

மூதாட்டி சாவு

தஞ்சாவூர், களத்துார் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் மனைவி பக்கிரியம்மாள், 68. நேற்று முன்தினம் மாலை, பட்டவர்சாமி கோவில் அருகே, ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X