பொது செய்தி

தமிழ்நாடு

'தை'யலே வாழீ!

Added : ஜன 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வி'தை'விடு வாழ்வின் உள்ளே விழுபொருள் தைஉண் டாமேபு'தை'யலே தேடிப் போகின்பூத்திடும் தைஅதி லாமே எ'தை'யுமே ஏகும் வாழ்வில்எழுவது எழுத்தது தையே உதயமாய் வருவதே தையாம் உவந்துநாம் வரவேற்போமேபொய்யிலா நிலையே நில்லும்பொறுமையும் அறமும் வெல்லும் வையமே அறியும் வண்ணம் வாழ்வியல் இதுசொன் னாய்உன்மையலில் மனது கொள்ளமாதமாய் அழகாய்ப் பூத்தாய் தையலே தையே வாழீதருவதாம் நலமே
 'தை'யலே வாழீ!

வி'தை'விடு வாழ்வின் உள்ளே விழுபொருள் தைஉண் டாமேபு'தை'யலே தேடிப் போகின்பூத்திடும் தைஅதி லாமே எ'தை'யுமே ஏகும் வாழ்வில்எழுவது எழுத்தது தையே உதயமாய் வருவதே தையாம் உவந்துநாம் வரவேற்போமேபொய்யிலா நிலையே நில்லும்பொறுமையும் அறமும் வெல்லும் வையமே அறியும் வண்ணம் வாழ்வியல் இதுசொன் னாய்உன்மையலில் மனது கொள்ளமாதமாய் அழகாய்ப் பூத்தாய் தையலே தையே வாழீதருவதாம் நலமே வாழீஉழைப்பதில் உயர்வாய்ச்சொன்னார் உழவெனும் தொழிலாம் அதனால் தழைப்பது உலகம் என்னும்தத்துவம் சொல்லும் தையேபிழைப்பெனில் பயிர் வளர்க்கும் பிழைப்(பு)அதே பெற்றம் வாழ்வில் செழிப்பதிவ் வுல(கு)அத்தொழிலால் சொல்லிடும் தையே வாழீஎதிரியின் தலையை வீரன் எடுத்தலோர் நாடு காக்கும் கதிரினை அறுக்கும் தொழிலோ குவலயம் முழுதுங் காக்கும்பதரெனும் களைகள் நீக்கிப்பயிரெனும் அறமே தேக்கிப்புதிரெனும் வாழ்வே உய்யப்பூத்தநற் பாவாய் வாழீ
- டாக்டர்எஸ்.மீனாட்சி சுந்தரம்,
மதுரை

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
14-ஜன-202105:38:19 IST Report Abuse
N Annamalai அருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X