பொது செய்தி

தமிழ்நாடு

3 லட்சம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம்

Added : ஜன 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருமயம், பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய தாலுகா உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நன்கு விளைந்துள்ளன. தற்போது, தொடர் மழையால், நெற்கதிர்களை
 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம்

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருமயம், பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய தாலுகா உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நன்கு விளைந்துள்ளன. தற்போது, தொடர் மழையால், நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியவில்லை.

வயலில் தேங்கியுள்ள மழை நீரை வடிக்க முடியாமல், தொடர்மழை பெய்து வருவதால், எஞ்சியுள்ள நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட இதர டெல்டா மாவட்டங்களிலும் சுமார், 3 லட்சம் ஏக்கரில், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து, மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து, காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலர் சுந்தரவிமல்நாதன் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழையானது அக்டோபர், 15 முதல் டிசம்பர், 15 வரை மட்டுமே நீடிக்கும். இந்தாண்டு பருவம் தவறி, எந்த ஆண்டும் இல்லாத அளவில், ஜனவரி வரை தொடர்மழை பெய்து வருகிறது.'நிவர், புரெவி' புயலை விட, டெல்டாவில் தற்போது பெய்த தொடர் மழை, பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறுவையில் அதிக மகசூல் கிடைத்ததாக மகிழ்ந்தோம். ஆனால், சம்பாவில் வேதனை தான் ஏற்பட்டு உள்ளது.ஏக்கருக்கு, 35 முதல், 40 மூட்டைகள் வரும் என்ற நிலையில், தற்போது, 10 மூட்டைகள் வருவதே சந்தேகம் தான். எனவே, டெல்டா மாவட்டங்களை முதல்வர் நேரில் பார்வையிட்டு, தேசிய பேரிடர் நிதியகத்தில் இருந்து, உரிய நிவாரண நிதியை பெற்று தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
14-ஜன-202108:10:41 IST Report Abuse
Charles பிளோரிடாவில் உள்ள விவசாயிகள் கூட்டு முயற்சியில் புயல் மற்றும் சூறாவளி மழை தண்ணீரை சேகரித்து அதற்கு அடுத்த விளைச்சலுக்கு உபயோகிக்கிறார்கள். அங்கு மூன்று அல்லது நாலு தோட்டத்துக்கு ஒரு குட்டை நிச்சயமாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் ஏன் விவசாயிகள் கூட்டாக முயற்சிசெய்ய முயலவில்லையா?
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
14-ஜன-202103:16:28 IST Report Abuse
Baskar கடவுள் இருக்கிறான் என்று இப்போதாவது நம்புங்கள். இந்த ஸ்டாலின் பி.ஆர். பாண்டியன் பேச்சை கேட்க வேண்டாம். அவர்கள் உங்கள் வயிற்றில் அடித்து நிறைய சொத்துக்கள் தலைமுறைக்கும் சேர்த்து வைத்து இருக்கின்றனர். அதிலும் இந்த பாண்டியன் ஒரு கைக்கூலி. எங்கு பணம் கிடைக்கிறதோ உங்களை காட்டி கொடுக்க கூட தயங்க மாட்டான். எல்லாம் ஆண்டவன் செயல் என்றுங்கால். நல்லதே நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X