தமிழ்நாடு

ஏற்பாடு! பழநி தைப்பூசத்தை முன்னிட்டு.... ரோந்து போலீசாருக்கு இருசக்கர வாகனங்கள்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : பழநி தைப்பூசத்தை முன்னிட்டு ரோந்து பணிக்காக இருசக்கர, நான்கு சக்கர 'பேட்ரோல்' வண்டிகளை போலீசார் பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர். பழநி தைப்பூசம் வருகிற 28 ம் தேதி நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், வசதிக்காகவும் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. கடந்தாண்டு பெரும்பாலும் கொரோனா ஊரடங்கிலேயே கழிந்ததால், பலர்

திண்டுக்கல் : பழநி தைப்பூசத்தை முன்னிட்டு ரோந்து பணிக்காக இருசக்கர, நான்கு சக்கர 'பேட்ரோல்' வண்டிகளை போலீசார் பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

பழநி தைப்பூசம் வருகிற 28 ம் தேதி நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், வசதிக்காகவும் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. கடந்தாண்டு பெரும்பாலும் கொரோனா ஊரடங்கிலேயே கழிந்ததால், பலர் கோயில்களுக்கு படையெடுக்கின்றனர். ஊரடங்கு தளர்வுக்குப் பின்பு நடைபெற உள்ள முக்கிய விழாவான பழநி தைப்பூசத்தில் பங்கேற்க, பாதயாத்திரை பக்தர்கள் பல்வேறு மாவட்ட பகுதியில் இருந்தும் வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்குள் வந்ததும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். டி.ஐ.ஜி., முத்துச்சாமி உத்தரவின் பேரில் முதன்முறையாக இருசக்கர பேட்ரோல் வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 40 இருசக்கரம் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கள் ஈடுபட தயார் செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் இருந்து ஒவ்வொரு 4 கி.மீ., க்கும் ஒரு இருசக்கர வாகனம் ரோந்து பணியில் இருக்கும். 4 இருசக்கர வாகனங்களை ஒரு நான்கு சக்கர வாகனம் கண்காணிக்கும்.

பொதுமக்கள் பயணத்தின்போது ஏதேனும் புகார் இருந்தால் போலீசாரை தொடர்பு கொள்ள ஆங்காங்கே உதவி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தொடர்பு கொண்டால் எஸ்.பி., தனிப்பிரிவுக்கு அழைப்பு வரும்.அதனடிப்படையில் எந்த இடம், எந்த வாகனம் ரோந்தில் இருக்கிறது என்ற தகவலை தனிப்பிரிவினர் கண்காணித்து சம்பவ இடத்திற்கு போலீசாரை அனுப்பி வைப்பர். பக்தர்களின் பாதுகாப்புக்காக உதவி மையங்கள் என பலவற்றையும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இம்மாதம் முழுவதும் இந்த ரோந்து வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X