சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி மூக்கு பொடி

Added : ஜன 14, 2021
Share
Advertisement
தேனி:டி.எஸ். பட்டணம் பொடி கம்பெனி பெயரில், போலியாக மூக்குப்பொடி தயாரித்து விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம், கம்பம் பகுதியில், டி.எஸ்.பட்டணம் பொடி போல போலியாக விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து, உத்தமபாளையம் போலீசார் விசாரித்தனர். இதில், ஆனைமலையன் பட்டியைச் சேர்ந்த அழகர்ராஜா, 40, என்பவர், போலி பொடி பாக்கெட்டுகள் விற்பது தெரிந்து, அவரை பிடித்து, விசாரணை

தேனி:டி.எஸ். பட்டணம் பொடி கம்பெனி பெயரில், போலியாக மூக்குப்பொடி தயாரித்து விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில், டி.எஸ்.பட்டணம் பொடி போல போலியாக விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து, உத்தமபாளையம் போலீசார் விசாரித்தனர். இதில், ஆனைமலையன் பட்டியைச் சேர்ந்த அழகர்ராஜா, 40, என்பவர், போலி பொடி பாக்கெட்டுகள் விற்பது தெரிந்து, அவரை பிடித்து, விசாரணை நடத்தினர்.

போடியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் தந்ததாக கூறினார். அவரைப் பிடித்து விசாரித்து, அவரிடம் இருந்து, 900 போலி மூக்குப்பொடி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வினியோகம் செய்ய பயன்படுத்திய ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், போடியைச் சேர்ந்த கதிரேசன், 49, பொடி தயாரிப்பு கம்பெனி நடத்தி வந்த முத்தழகு என்பவரையும் கைது செய்தனர். இவரிடம் இருந்து, பொடி தயாரிக்க பயன்படுத்திய, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான நால்வரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X