நத்தம் : சீசன் நிறைவடைவதால் நத்தம் பகுதி மார்கெட்டில் ஐஸ் கிரீம் ஆப்பிள் விலை உயர்வடைந்துள்ளது.
நத்தம் வட்டாரத்தில் கோபால்பட்டி, வத்திபட்டி பகுதிகளில் மாங்காய் மார்க்கெட் அதிகம் உள்ளன. கோடை காலத்துடன் மாங்காய் சீசன் முடிவடைவதால் பிற நாட்களில் சீசனுக்கு ஏற்றவாறு இப்பகுதி பழ வியாபாரிகள் மாற்று வியாபாரத்தில் இறங்குகின்றனர். இதன்படி திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், கொடைக்கானல் பிளம்ஸ் உள்ளிட்ட மொத்த வியாபாரம் செய்கின்றனர்.நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஜம்மு, காஷ்மீர், சிம்லா மாநிலங்களில் ஆப்பிள் சீசன் நிலவுகிறது. சீசன் துவக்கத்தில் ரூ.1200க்கு விற்ற 13 கிலோ பெட்டி தற்போது ரூ.1600 வரை விலை உயர்ந்து உள்ளது.
கோபால்பட்டி வியாபாரி ஹரிஹரன் கூறியதாவது: சீசனுக்கு ஏற்றவாறு விலை உயர்கிறது. விளைச்சல் குறைவால் விலை உயர துவங்கியுள்ளது. ஜம்மு, காஷ்மீர், சிம்லா மாநில வியாபாரிகள், விவசாயிகள் குளிர்பதன கிடங்குகளில் பதுக்குவதும் விலை உயர்வுக்கு காரணமாகிறது. இதனால் தற்போது 13 கிலோ உள்ள பெட்டி ரூ.1600 வரை உயர்ந்துஉள்ளது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE