திண்டுக்கல் : பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ கிலோ ரூ.4000க்கு விற்றது.
திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழநி, நத்தம், வடமதுரையில் 10 ஆயிரம் எக்டேரில் மல்லிகை, கனகாம்பரம், செண்டு பூ, கோழிக்கொண்டை ஆகிய பூக்கள் சாகுபடியாகிறது. கடந்த ஒரு மாதமாக கடும் பனிப்பொழிவால் பூக்கள் சாகுபடி பாதித்துள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.பொங்கலை முன்னிட்டு, நேற்று பூக்கள் இரு மடங்கு விலை அதிகரித்து விற்றது.
ரூ.2000 க்கு விற்ற மல்லிகை ரூ.4000, ரூ.1000க்கு விற்ற முல்லை ரூ.2000, ரூ.700 க்கு விற்ற பிச்சி பூ ரூ.1200, ரூ.600 க்கு விற்ற காக்கரட்டான் ரூ.1200, ரூ.50 க்கு விற்ற செண்டு பூ ரூ.100, ரூ.100 க்கு விற்ற பன்னீர் ரோஜா ரூ.200, ரூ.25 க்கு விற்ற கோழிக் கொண்டை ரூ.50 க்கும் விற்றது. வரத்து குறைந்தாலும் விலை அதிகரித்து விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல் ஒரு ஜோடி பெரிய கரும்பு ரூ.80 க்கும், சிறிய கரும்பு ரூ.50 க்கும், மஞ்சள் கிழங்கு ஒரு கட்டு ரூ.60 க்கும், ஐந்து வகையான கூரை பூக்கள் ஒரு கட்டு ரூ.30 க்கும் விற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE