புதுச்சேரி:புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தன் பதவியை ராஜினாமா செய்து முதல்வரிடம் கடிதம் அளித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் மல்லாடி கிருஷ்ணாராவ் கடந்த மாதம் ஒரு விழாவில் பேசும்போது அரசியலில் இருந்து விலகப் போவதாக அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு சிறந்த எம்.எல்.ஏ.விற்கான விருது வழங்கும் விழா ஏனாமில் கடந்த 6ம் தேதி நடந்தது. விருதை பெற்று பேசிய மல்லாடி கிருஷ்ணாராவ் 'நடக்க உள்ள தேர்தலில் போட்டியிட மாட்டேன். என் குடும்பத்தை சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வர மாட்டார்கள்' என தெரிவித்தார்.
இந்நிலையில் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்வர் நாராயணசாமியிடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அரசு சார்பில் வழங்கிய இரு கார்களையும் அமைச்சர் திருப்பி ஒப்படைத்து விட்டார். தங்கியிருந்த அரசு வீட்டையும் திரும்ப பெற்றுக் கொள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஏற்று கவர்னருக்கு அனுப்பினால் மட்டுமே மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி இழப்பார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE