சேலம்:''உதயநிதி அரசியல் நாகரீகம் தெரியாமல் அருவருப்பாக பேசியிருக்கிறார். வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பதிலடி தர மக்கள் தயாராக உள்ளனர்'' என தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் இப்ராஹிம் கூறினார்.
சேலத்தில் அவர் மேலும் கூறியதாவது:தமிழகத்தில் மத நல்லிணக்க பிரசாரம் செய்து வரும் நான் கடந்த முறை சேலம் வந்து சென்ற பின் பட்டியல் இன மக்களை தவறான வழியில் திருமாவளவன் திசை திருப்பி வருகிறார். அதை அந்த மக்கள் புரிந்து கொண்டதால் தற்போது ஹிந்து - முஸ்லிம் இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்த திருமாவளவன் களமிறங்கி விட்டார்.
என்னை முகநுாலில் எச்சரித்து திருமாவளவன் கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்தனர். ஜனநாயக நாட்டில் வன்முறையை துாண்டி அச்சுறுத்தல் ஏற்படுத்தும் திருமாவளவன் கட்சியினர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE