சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி காதலில் சிக்கும் பஞ்சாலை பெண் தொழிலாளர்கள்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
வேடசந்துார் : கற்பனை வாழ்வில் கரைசேர்வதாக நினைத்து, வாழ்வை தொலைக்கும் ஆலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு கவுன்சிலிங் அவசியம் தேவைப்படுகிறது. வேடசந்துார், குஜிலியம்பாறை பகுதி ஆலைகளில் பெரும்பாலும் ஏழ்மை பின்னணியுடன் பலர் பணியாற்றுகின்றனர். இந்தப் பெண்களில் சிலர் விழிப்புணர்வு இன்றி, 'போலி' காதலில் சிக்கி பொன்னான வாழ்வை தொலைக்கின்றனர்.கல்வார்பட்டி

வேடசந்துார் : கற்பனை வாழ்வில் கரைசேர்வதாக நினைத்து, வாழ்வை தொலைக்கும் ஆலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு கவுன்சிலிங் அவசியம் தேவைப்படுகிறது.

வேடசந்துார், குஜிலியம்பாறை பகுதி ஆலைகளில் பெரும்பாலும் ஏழ்மை பின்னணியுடன் பலர் பணியாற்றுகின்றனர். இந்தப் பெண்களில் சிலர் விழிப்புணர்வு இன்றி, 'போலி' காதலில் சிக்கி பொன்னான வாழ்வை தொலைக்கின்றனர்.கல்வார்பட்டி அருகே கோலார்பட்டியை சேர்ந்தவர் அமுதா 33.இவருக்கு 16 மற்றும் 14 வயதில் இரு மகள்கள் உள்ளனர். நுாற்பாலையில் பணிபுரிந்தார். சிலநாட்களுக்கு முன், மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வேடசந்துார் விருதலைப்பட்டி அருகே ஒரு நுாற்பாலையில், கரூர் மாவட்டம் நல்லாம் பட்டியைசேர்ந்த மல்லீஸ்வரன் மனைவி கலாராணி 35, விடுதியில் தங்கி பணியாற்றினார். இவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரும் மில்லில் 'அவுட் பாஸ்' பெற்றுக் கொண்டு ஊருக்குச் செல்வதாகக் கூறியவர், வீட்டுக்குச் செல்லவில்லை. கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.கடந்த மாதம் ஒரு நுாற்பாலையில் வேலை பார்த்த ஒரு இளம்பெண், மகாராஷ்டிரா மாநில வாலிபருடன் ஓட்டம் பிடித்தார்.

அவரை மொபைலில் தொடர்புகொண்ட போலீசார் விசாரிக்கின்றனர்.வேடசந்துார் பகுதி நுாற்பாலை ஒன்றில் பணிபுரிந்த ஒருஇளம்பெண்ணும், ஒரு வாலிபரும் நன்கு பழகி வந்தனர். சிலநாட்களுக்கு முன், அந்த வாலிபரைத் தேடி ஒட்டன்சத்திரம் பகுதிக்கு சென்றார். இந்நிலையில் மலைப் பகுதியில்கடந்தவாரம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.இந்த பிரச்னைகளின் பின்னணியில் காதல் உள்ளது. இவையெல்லாம் கடந்த ஒரு மாதத்தில் நடந்தவை. அடிக்கடி இதுபோல நடப்பதால், பெண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் அளிக்க வேண்டும். சமூகநலத் துறையினர் இதில் அக்கறை காட்ட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X