சென்னை:நடப்பு 2020 -- 2021ம் நிதியாண்டில் தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி சிவகங்கை மாவட்டம் கீழடி; துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுார், சிவகளை மற்றும் அவற்றை சுற்றிய பகுதிகள், ஈரோடு மாவட்டம் கொடுமணல்; கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை; அரியலுார் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் மாளிகைமேடு ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய ஒப்புதல் கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரி, வேலுார், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் புதிய கற்கால இடங்களைக் கண்டறியும் கள ஆய்வுக்கும் திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையின் நாகரிகத்தை அறியும் வகையில் கள ஆய்வு செய்யவும் அனுமதி கிடைத்துள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE