சின்னமனுார்:தேனிமாவட்டம் மேகமலையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மேகமலை முக்கிய இடம் பிடிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு நுாற்றுக்கணக்கானவர்கள் பலியாயினர். சில நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக இங்கு மகாராஜாமெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு, ைஹவேவிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறியஅளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நுாற்றுக்கணக்கான மரங்கள் விழுந்துள்ளன. சீரமைப்பு பணி தொடர்கிறது.
இதனால் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று முதல் ஜன.15(நாளை) வரை மூன்று நாட்களுக்கு மேகமலைக்கு போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். மருத்துவ தேவை தவிர அரசு பஸ்கள், தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
மேகமலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் அருவிப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE