சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி -- ஆட்டோ மோதல்: பலி 2

Added : ஜன 14, 2021
Share
Advertisement
துாத்துக்குடி:கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் சிறுமி உள்பட இருவர் பலியாயினர். 8 பேர் காயமுற்றனர்.திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடியூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 35, கோவையில் லேத் பட்டறை நடத்திவருகிறார். பொங்கலுக்காக கோவையில் இருந்து ஒரு லோடு ஆட்டோவில் கிளம்பினர். கோபாலகிருஷ்ணன், மனைவி விஜயா 34, மகள் யாசிகா 8, மகன் பிரனேஷ் 3 மற்றும்

துாத்துக்குடி:கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் சிறுமி உள்பட இருவர் பலியாயினர். 8 பேர் காயமுற்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடியூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 35, கோவையில் லேத் பட்டறை நடத்திவருகிறார். பொங்கலுக்காக கோவையில் இருந்து ஒரு லோடு ஆட்டோவில் கிளம்பினர். கோபாலகிருஷ்ணன், மனைவி விஜயா 34, மகள் யாசிகா 8, மகன் பிரனேஷ் 3 மற்றும் உறவினர்கள் என பத்து பேர் வந்தனர். ஆட்டோவை பாஸ்கர் 37 ஓட்டினார்.

நேற்று அதிகாலை துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைசெவல், சத்திரபட்டி அருகே நான்குவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தனர். அப்போது ரோட்டோரத்தில் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது லோடு ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ முன்பாகம் பலத்த சேதமடைந்தது. இதில் பாஸ்கரின் மனைவி சுமித்ரா 35, கோபாலகிருஷ்ணன் மகள் யாசிகா 8 ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

கோபாலகிருஷ்ணன், மனைவி விஜயா, மகன் பிரனேஷ், பாஸ்கரின் மகன் ராஜ்குமார், பார்த்திபன் 20, பிரிதா 20 ஆகிய 8 பேர் காயமுற்றனர். காயமடைந்தவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X