மூணாறு:சபரிமலையில் தரிசனத்திற்கு போலி பாஸ் தயார் செய்து கொடுத்த மூணாறு அருகே வட்டவடை கோவிலுாரைச் சேர்ந்த சிவா 24, என்பவரை பம்பை போலீசார் கைது செய்தனர்.
கோவிலுாரைச் சேர்ந்த 12 ஐயப்ப பக்தர்கள் நேற்று முன்தினம் சபரிமலைக்குச் சென்றனர். அங்கு 'ஆன் லைன்' மூலம் பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாஸ்களை போலீசார் ஆய்வு நடத்தியபோது போலி என தெரியவந்தது.
பம்பை போலீசார் பக்தர்களிடம் நடத்திய விசாரணையில், அவற்றை கோவிலுாரைச் சேர்ந்த சிவாவிடம் பணம் கொடுத்து வாங்கியதாக தெரியவந்தது. பம்பை எஸ்.ஐ., சந்திரசேகரன் தலைமையில் போலீசார் தேவிகுளம் எஸ்.ஐ., ஜோய்ஜோசப் உதவியுடன் சிவாவை கைது செய்து பம்பைக்கு அழைத்துச் சென்றனர். தமிழகத்தில் போலி பாஸ் தயாரித்ததாக சிவாவிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பம்பை போலீசார் ஐயப்ப பக்தர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE