திண்டுக்கல்:'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.,வின் கனவு பலிக்காது' என, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
அவர் கூறியது: விவசாயிகள் பிரச்னையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு 2 மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி சொல்கிறது. இது மத்திய அரசு இந்த பிரச்னையை 2 மாதத்திற்கு தள்ளிப்போடுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ள 4 பேரும் ஏற்கனவே வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள்தான்.
டெல்டா மாவட்டங்களில் மழை காரணமாக மூன்று லட்சம் ஏக்கருக்கு மேல் அறுவடை பாதித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 18 மாதங்களுக்கு பின் சி.பி.ஐ., 3 பேரை கைது செய்துள்ளது. வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
கொரோனா பாதித்தபோது நிவாரணம் கொடுக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தை துவக்கிய பின் பொங்கல் பரிசு, ரூ.2500 கொடுக்கப்படுகிறது. அரசு பணத்தை கொடுத்து தேர்தல் ஆதாயம் பெற ஆளுங்கட்சி நினைக்கிறது.அ.தி.மு.க.,- பா.ஜ., மூழ்கும் கப்பல்தான். இந்த தேர்தலில் துாக்கி நிறுத்தலாம் என்று கனவு கண்டால் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE