பொது செய்தி

தமிழ்நாடு

95 சதவீத கார்டுகளுக்கு மட்டும் ரூ.2500 ஒதுக்கீடு

Added : ஜன 14, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:பொங்கல் பரிசுத்தொகை 95 சதவீத கார்டுகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைசி கட்டத்தில் வரும் நுகர்வோருக்கு பணம் வழங்க முடியாமல் ரேஷன் ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால் 95 சதவீத கார்டுகளுக்கு மட்டுமே தொகை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ரேஷன் கடைக்கு

ராமநாதபுரம்:பொங்கல் பரிசுத்தொகை 95 சதவீத கார்டுகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைசி கட்டத்தில் வரும் நுகர்வோருக்கு பணம் வழங்க முடியாமல் ரேஷன் ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால் 95 சதவீத கார்டுகளுக்கு மட்டுமே தொகை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ரேஷன் கடைக்கு குறைந்தது 50 பேருக்கு குறைத்து ஒதுக்கீடு வந்துள்ளது. எனவே கடைசி நாட்களில் வரும் கார்டுதாரர்களுக்கு தொகை இல்லை என ரேஷன் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட ரேஷன் பணியாளர் சங்க செயலாளர் ஞானசேகரன் கூறும்போது, 5 சதவீத தொகையை பொங்கலுக்கு முன் அரசு வழங்கும் என்று எதிர்பார்த்தோம், என்றார். மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் கூறுகையில், பணம் கிடைக்காதவர்களுக்கு பொங்கலுக்கு பிறகு வழங்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X