அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதுவும் இலவசம் இல்லை; மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடு தான்!: மக்கள் நீதி மையம் தலைவர் கமல் பேட்டி

Added : ஜன 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை:''கம்ப்யூட்டர், குடும்ப பெண்களுக்கு மாத சம்பளம் தருவது போன்றவை, இலவசங்கள் அல்ல; மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடு,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் தெரிவித்தார்.கோவையில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, கமல் அளித்த பதில்:நடிகர் கமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம்; சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதி யில் கூட மக்கள் நீதி மையம் ஜெயிக்காது' என,

கோவை:''கம்ப்யூட்டர், குடும்ப பெண்களுக்கு மாத சம்பளம் தருவது போன்றவை, இலவசங்கள் அல்ல; மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடு,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் தெரிவித்தார்.

கோவையில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, கமல் அளித்த பதில்:நடிகர் கமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம்; சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதி யில் கூட மக்கள் நீதி மையம் ஜெயிக்காது' என, தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் கூறியிருக்கிறாரே...

அவருடைய பிரார்த்தனையை பகிரங்கமாக சொல்கிறார். எங்கள் பயணத்தில் கிடைக்கும் சேதி வேறு விதமாக இருக்கிறது. ஊடகங்கள் இப்போதுதான், சற்றே எங்களை திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. அதன் வீடியோக்களை பார்த்தாலே, உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.

எனது வாழ்நாளில் நட்சத்திர அந்தஸ்தை அனுபவித்தவன். இத்தகைய எழுச்சியை, கூட்டத்தை இதுவரை பார்த்ததில்லை. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி ஓட்டுகளாக மாறும்.திராவிட கட்சிகள் போல், இலவசத்தை நம்புகிறீர்களா? தேர்தல் பரப்புரையில் கம்ப்யூட்டர் தருகிறோம்; குடும்ப பெண்களுக்கு மாத சம்பளம் தருவோம் என சொல்கிறீர்களே...

இலவசம் என எதுவும் சொல்லவில்லை. மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடு. அது, அரசுக்கும் சொந்தம்; மக்களுக்கும் சொந்தம். இலவசம் என்கிற கணக்கில் வராது. ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். அதை நோக்கி நகர்கிறோம். ஏற்கனவே, லேப்-டாப் வழங்கப்படுகிறது; 2 ஜி.பி., டேட்டா வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித் துள்ளதே...

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அவர்களுக்கு மடிக்கணினி கொடுத்தால் என்ன; மேனி கணினி கொடுத்தால் என்ன? அவர்கள் கொடுக்கும் டேட்டாவில், கல்வி கற்க முடியுமா என்பது சந்தேகம். மடிக்கணினி கொடுப்பது இலவசம்; நாங்கள் கொடுப்பது, மின் இணைப்பு மாதிரி. சேவை பெறும் உரிமையை நிரூபிக்கும் கருவியாக, அது இருக்கும்.இவ்வாறு, அவர் பேட்டி அளித்தார்.


மயிலாப்பூரில் போட்டி?

கமல் மேலும் கூறுகையில், ''நாங்கள் ஜாதியை பார்க்க மாட்டோம்; சாதனையை தான் பார்ப்போம். நேர்மையும் தகுதியும் இருந்தால், பொது தொகுதியிலும் தாழ்த்தப்பட்டோரை நிறுத்துவோம். சட்டசபை தேர்தலில், கண்டிப்பாக போட்டியிடுவேன்; மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறுவது தகவலே.

வேளாண் திருத்த சட்டத்தை அமல்படுத்த தடை விதித்திருக்கும் உச்சநீதிமன்றத்துக்கு நன்றி. இனியாவது, மத்திய அரசு பேச்சை துவக்க வேண்டும். அரசியல் என்பது தியாகமாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை; அதை, வேலையாக எடுத்துக் கொண்டும் செய்யலாம்,'' என்றார்.ரஜினி குறித்த கேள்விக்கு நழுவல்'உங்கள் நண்பர் ரஜினி, வீட்டுச் சிறையில் இருக்கிறாரா' என, ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ''எனக்குத் தெரியலீங்க; பயணத்தில் இருக்கிறேன்,'' என, நழுவினார். 'நண்பர் ரஜினியை சந்தித்து விட்டு, சேதி சொல்கிறேன் என கூறியிருந்தீர்களே' என, மீண்டும் கேட்டதற்கு, பதிலளிக்காமல், 'இவர் நன்றி கூறுவார்' என, கட்சியின் துணை தலைவர் மகேந்திரனை அனுப்பி விட்டு, 'எஸ்கேப்' ஆனார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202107:57:16 IST Report Abuse
ஆப்பு சும்மா நீங்களும் வருஷம் 5 கோடி பேருக்கு வேலை தருவோம்னு வாக்குறுதி குடுங்க கமலு. ஜெயிச்சதுக்கப்புறம் அமித ஷா வை விட்டு அது வெறும் ஜூம்லான்னு சொல்ல வெச்சுறலாம். மக்களால் என்ன பண்ண முடியும்?
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
14-ஜன-202107:26:48 IST Report Abuse
natarajan s திரு கமல் கட்சி தேறாது. இலவசம் /பணம் இல்லாமல் தமிழ் மக்கள் இவருக்கு வாக்கு அளிப்பார்கள் என்று தோணவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X