சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்தியாவிலேயே அதிக மழைப்பொழிவு மாஞ்சோலை எஸ்டேட்டில் பதிவு

Added : ஜன 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருநெல்வேலி:கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவிலேயே அதிக மழைப்பொழிவு, திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் பதிவானது. தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு, 50 ஆயிரம் கன அடி வெள்ளம் சென்றது.திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பகலிலும் தொடர்ந்து பெய்தது. அதிகபட்சமாக, பாபநாசம் அணைப் பகுதியில், 18.5 செ.மீ., மழை பெய்தது.
இந்தியாவிலேயே அதிக மழைப்பொழிவு மாஞ்சோலை எஸ்டேட்டில்   பதிவு

திருநெல்வேலி:கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவிலேயே அதிக மழைப்பொழிவு, திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் பதிவானது. தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு, 50 ஆயிரம் கன அடி வெள்ளம் சென்றது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பகலிலும் தொடர்ந்து பெய்தது. அதிகபட்சமாக, பாபநாசம் அணைப் பகுதியில், 18.5 செ.மீ., மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில், 16.5 செ.மீ., பெய்தது.பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி, உபரி நீர் முழுதும், தாமிரபரணியில் திறக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் மழைநீரும் சேர்ந்து, வினாடிக்கு, 50 ஆயிரம் கன அடி நீர் சென்றது.

வழியோர கிராமங்களில் ஆலடியூர், காட்டுமன்னார்கோயில், வண்ணார்பேட்டை என நீர் புகுந்த இடங்களில், மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, 12 சிறப்பு முகாம்களில், 300 பேர் தங்க வைக்கப் பட்டனர். தாமிரபரணி ஆற்றின் இருபுறமும், தற்போது பிசான நெல் பயிரிடப்பட்டுள்ளது. பல இடங்களில் வயல்களை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர், கோடகநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்தை தரும், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்துள்ளது. மாஞ்சோலை, ஊத்து பகுதியில், 52 செ.மீ., மாஞ்சோலையில், 35 செ.மீ., நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில், 37 செ.மீ., மழை பெய்தது.கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவிலேயே இங்கு அதிக மழைப்பொழிவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dubuk U - Chennai,இந்தியா
19-ஜன-202110:54:19 IST Report Abuse
Dubuk U சேமித்து வைக்க எவ்வளவு இடம் தேவை என்பதை பற்றி எழுதவும்
Rate this:
Cancel
Mayilcity Ragu Raman - Mayiladuthurai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202121:06:39 IST Report Abuse
Mayilcity Ragu Raman Unfortunately there is no provision in Tamilnadu to store rainwater. Though hundreds of crores are 'spent' every year for maintaining/digging tanks to store harvested rainwater maximum water goes into the sea - because of huge corruption no maintenance is done nor any new tank dug.
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
15-ஜன-202121:43:32 IST Report Abuse
Sundararaman Iyer Unfortunately there is no provision in Tamilnadu to store rainwater. Though hundreds of crores are 'spent' every year for maintaining/digging tanks to store harvested rainwater maximum water goes into the sea - because of huge corruption no maintenance is done nor any new tank dug.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X