தமிழக நிகழ்வுகள்:-
1. போலியாக மூக்குப்பொடி தயாரித்து விற்பனை : நால்வர் கைது
கம்பம்:டி.எஸ்.பட்டணம் பொடி கம்பெனி பெயரில் போலியாக மூக்குப்பொடி தயாரித்து விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டனர். ரூ. 2 லட்சம் மதிப்புள்ள இயந்திரம், பொடி பாக்கெட்டுகள், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

2. தெளிவற்ற 'மாஸ்டர்' திரையை கிழித்த ரசிகர்கள்
சேலம்:மாஸ்டர் படம் தெளிவாக தெரியாததால், ரசிகர்கள் செருப்பு வீச, திரைச்சீலை கிழிந்ததால், படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
3. வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.14.20 லட்சம் மோசடி
ராமநாதபுரம் : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.14.20 லட்சம் மோசடி செய்த அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீது ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
4. கஞ்சா விற்ற வாலிபர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் நேற்று இரவு 7:00 மணிக்கு சக்கரக்கோட்டை ரயில்வே கேட் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற ஆர்.எஸ்.மடை மகாலிங்கம் மகன் விக்னேஸ்வரன் 27, கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

5. சீட்டு நடத்தி ரூ.3.5 கோடி மோசடி; நகை கடை உரிமையாளர் கைது
திருப்பூர் : தாராபுரத்தில், நகை சீட்டு நடத்தி, 3.50 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, கடை உரிமையாளரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
6. பத்திரப்பதிவு முறைகேடு; ரூ. 84 லட்சம் மீட்பு
திருப்பூர் : பத்திரப்பதிவு துறையில், 1.33 கோடி ரூபாய் அளவுக்கு ரசீது முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், இதுவரை, 84.71 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குற்றம்:-
1. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
மதுபானி: பீஹாரின் மதுபானி மாவட்டத்தில், 15 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை, நேற்று முன்தினம், சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், காட்டிக்கொடுக்க முடியாமல் போகவேண்டும் என்பதற்காக, அந்த சிறுமியின் கண்கள், கூர்மையான ஆயுதங்களால் சிதைக்கப்பட்டன. கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அந்த சிறுமிக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மூன்று பேர், கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் நேற்று தெரிவித்தனர்.

2. கள்ள சாராயத்தால் 20 பேர் பலி
போபால்: மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில், கள்ளத்தானமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியதால், மேலும், ஆறு பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து, இதில் பலியானோர் எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்துள்ளது. இவர்களை தவிர, 21 பேர், மருத்துவமனை களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் உடல் உறுப்புகளை சேதப்படுத்தி இருப்பது, உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கை வாயிலாக உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

உலக நடப்பு:-
நியூசி., பார்லி., கதவை உடைத்தவர் கைது
வெலிங்டன்: நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் உள்ள பார்லி. கட்டடத்தில் நேற்று அத்துமீறி நுழைந்த ஒருவர் கையில் இருந்த கோடாரியால் வாசல் கண்ணாடிக் கதவை சுக்கு நுாறாக உடைத்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் போது பார்லி.யில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பார்லி. கட்டடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
டெரி ஹாட்: அமெரிக்காவில் மிசோரி நகரில் ஒரு கர்ப்பிணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து வயிற்றை அறுத்து சிசுவை வெளியே எடுத்த குற்றத்திற்காக லிசா மோன்ட்கோமரி 52 என்ற பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE