திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி உற்ஸவம் நடந்தது.
திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேயர் கோயிலில் மகா சுதர்ஸன ஹோமம் முடிந்து மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மூலவர் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்கு யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம் முடிந்து வடைமாலை சாத்துப்படியானது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளிய ஆஞ்சநேயர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, சூக்த ஹோமம், ஆஞ்சநேயர் மூலமந்திர ஹோமங்கள் முடிந்து மூலவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து வடைமாலை சாத்துப்டியானது.
எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை முடிந்து வடைமாலை சாத்துப்படியானது. மகாலட்சுமி காலனி வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE