பொது செய்தி

இந்தியா

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் புத்தகங்கள் வெளியீடு

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பொங்கல் விழாவையொட்டி பத்து நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது.நிறுவன இயக்குனர் சம்பத் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் பக்தவத்சல பாரதி எழுதிய சங்க கால உணவு என்ற நுால், சம்பத் எழுதிய சவராயலு நாயகர் என்ற நுால், சிலம்பு செல்வராசு எழுதிய அறிஞர் கோவை ஞானி கடிதமும் கருத்ததும் என்ற நுால்
 மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி  நிறுவனம் சார்பில் புத்தகங்கள் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பொங்கல் விழாவையொட்டி பத்து நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது.

நிறுவன இயக்குனர் சம்பத் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் பக்தவத்சல பாரதி எழுதிய சங்க கால உணவு என்ற நுால், சம்பத் எழுதிய சவராயலு நாயகர் என்ற நுால், சிலம்பு செல்வராசு எழுதிய அறிஞர் கோவை ஞானி கடிதமும் கருத்ததும் என்ற நுால் வெளியிடப்பட்டன.

மேலும் நிறுவனத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற சுந்தரமுருகன் எழுதிய 20ம் நுாற்றாண்டில் பெண் கவிஞர்கள் என்ற நுால், சரவணன் எழுதிய வெண்பாவும் பாடுபொருளும், ராஜலட்சுமி எழுதிய புதுக்கவிதையில் பெண் அடையாள உருவாக்கம் என்ற நுால்கள் வெளியிடப்பட்டன.மேலும் டாக்டர் பட்ட ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் ஜவகர் ரம்யா எழுதிய பன்முகப் பார்வையில் தமிழிலக்கியங்கள், கலைவாணி எழுதிய திருவாசகத்தில் மெய்ப்பாடு, நுாருல் ஆலியா எழுதிய பெண்ணியக் கவிதைகள் இலக்கிய மெய்ப் பாட்டு ஆய்வு, கண்ணன் எழுதிய கம்பளத்து நாயகர் இன வரைவியல் ஆய்வு ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன

.புதுச்சேரி பல்கலை., தமிழ்த் துறை பேராசிரியர்கள் ரவிக்குமார், ஸ்ரீவித்யா ஆகியோர் நுால்களை திறனாய்வு செய்தனர். பேராசிரியர்கள் பக்தவச்சல பாரதி, ரத்தின வேங்கடேசன், முருகையன், சிலம்பு செல்வராஜ் உட்பட காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், காஸ்மோ பாலிட்டன் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து செய்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X