புதுச்சேரி; தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகத்தின் சார்பில், திருவள்ளுவர் விழா மற்றும் பொங்கல் விழா நடந்தது.தமிழ்ச் சங்கத்தில் நடந்த விழாவிற்கு தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பாலகிருஷ்ணன், விஜயரங்கம், வேணுகோபால் முன்னிலை வகித்தனர். அசோகன் வரவேற்றார்.விழாவில் வீடு தோறும் திருக்குறள் எழுதி வரும் ஞானசேகரனுக்கு 'திருக்குறள் நெறிச் செம்மல்' என்ற பட்டத்தை, வெற்றித் தமிழர் பேரவை அமைப்பாளர் கோவிந்தராசு வழங்கினார். சீனு மோகன்தாசு பாராட்டி பேசினார்.விழாவில் நெய்தல் நாடன் தலைமையில் நடந்த கவியரங்கில் கவிஞர்கள் பாலசுப்ரமணியன், மணிமாறன், மாணிக்கம்,வேலாயுதம், தமிழ்நெஞ்சன், அன்பு நிலவன், ஆனந்தன், வசந்தகுமார் ஆகியோர் கவிதை வாசித்தனர். நிகழ்ச்சியை, அரங்க முருகையன் தொகுத்து வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE