புதுச்சேரி: முதல்வர் தன் போராட்டத்தால் என்ன சாதித்தார் என்பதை புதுச்சேரி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாஜி எம்.பி.,ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:நான்கு நாட்கள் போராட்டத்தை மூன்று நாட்களில் முடித்த முதல்வர், தன் போராட்டத்தால் என்ன சாதித்தார் என மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கவர்னரை மாற்றி விட்டாரா... மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்று விட்டாரா, புதுச்சேரியின் தனித்தன்மையை காப்பாற்றி விட்டாரா..கடந்த முறை 8 நாட்கள் போராட்டம் நடத்தி ஒன்றுமே செய்ய முடியாதது போல் தற்போதும் பெரிய தோல்வியில் முடிந்துள்ளது. மாறாக மக்களும், காவல் துறை அதிகாரிகளும் பாதித்தனர். மத்திய ராணுவப் படை வந்து பதற்றமான சூழ் நிலை உருவானது. இது போன்ற பொறுப்பற்ற முதல்வரை இந்த நாடு கண்டதுண்டா.மத்திய உள்துறை அமைச்சர் இங்கு வந்து, புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு துளி கூட இல்லை என கூறிய பிறகும் முதல்வர் அதே கருத்தை வெளியிடுவதை யார் நம்புவார்கள்.வார்த்தை ஜாலங்களை தவிர்த்து அடுத்த இரண்டு மாதங்களுக்காவது ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE