பொது செய்தி

இந்தியா

'போலியோ' சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஒத்திவைப்பு

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கருத்தில் கொண்டு, வரும், 17ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த, 'போலியோ' சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும், வரும், 17ம் தேதி, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.அடையாளம்இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

புதுடில்லி : கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கருத்தில் கொண்டு, வரும், 17ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த, 'போலியோ' சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.latest tamil newsநாடு முழுதும், வரும், 17ம் தேதி, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.


அடையாளம்


இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருந்ததாவது:தேசிய நோய் தடுப்பு தினமான, ஜனவரி, 17ம் தேதி, சொட்டு மருந்து வழங்கும் முகாம், துவங்கப்படும். இரண்டு அல்லது, மூன்று நாட்களுக்கு, நாடு முழுதும், இந்த முகாம் நடக்கும். தடுப்பு மருந்துகள் பெறாத குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறி இருந்தார்.


latest tamil newsஇதற்கிடையே, 'கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தும் பணிகள், நாளை மறுநாள் முதல் துவங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
கடிதம்


இது தொடர்பாக, கடந்த, 9ம் தேதி, அனைத்து மாநில சுகாதாரத் துறை முதன்மை செயலர்களுக்கும், மத்திய சுகாதாரத் துறை, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 'எதிர்பாராத நடவடிக்கைகள் காரணமாக, வரும், 17ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diya -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜன-202117:03:48 IST Report Abuse
Diya Have ward and street wise lockdown for half a day for polio and other vaccinations. Parent should come to polio centers by walk. Only parents with children should be allowed to come outside. It should be walkable distance. This may reduce corona virus spread. Zero corona case areas can be done first.
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
14-ஜன-202114:06:13 IST Report Abuse
Elango குழந்தைகளின் நலனில் அக்கறை இல்லையா....போலியோ வின் கொடூரம் தெரிந்தும் இப்படி செய்வது தவறு... அரசியலுக்காக கோவிட் ஊசி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X