பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பாச்சனுாரில் தரைப்பாலம் பணிக்கு பூமி பூஜை

Added : ஜன 14, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த கோலியனுார் ஒன்றியம் திருப்பாச்சனுாரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடியில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை விழா நடந்தது.விழாவிற்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அ.தி.மு.க., கோலியனுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். அமைச்சர் சண்முகம் பூமி பூஜை

விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த கோலியனுார் ஒன்றியம் திருப்பாச்சனுாரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடியில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை விழா நடந்தது.விழாவிற்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அ.தி.மு.க., கோலியனுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். அமைச்சர் சண்முகம் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.இதில், ரூ.71.55 லட்சம் மதிப்பீட்டில் நரி ஓடை கீழ்மட்டத் தரைப்பாலம் அமைக்கும் பணி, ரூ.41.63 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளப் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி மற்றும் ரூ.7.32 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச்சாலை அமைக்கும் பணிகளுக்கு என மொத்தம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து பணிகள் துவங்கப்பட்டது.நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், மஞ்சுளா சசிக்குமார், விஜயசாரதி, கருணாமூர்த்தி, முரளி, கணேசன், கார்த்தி, கனகராஜ், ராஜசேகர், குணசேகர், நாராயணன், ஆதிமுருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலுார் மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குமரன், நிர்வாகிகள் இளையபெருமாள், புகழ், ராமதாஸ், சரவணன், வாசுதேவன், ஆறுமுகம், சுந்தர்ராஜ், ஆறுமுகம், குமார், தவமணி, ராஜி, கமலஹாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X