விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின், 16வது பேரவை கூட்டம் நடந்தது.விழுப்புரம் சோலை மகாலில் நடந்த கூட்டத்திற்கு, ஆவின் சேர்மன் பேட்டை முருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். துணை பொது மேலாளர் அருணகிரிநாதன் வரவேற்றார். துணைப்பதிவாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். பொதுமேலாளர் புகழேந்தி ஆண்டறிக்கை மற்றும் பேரவை பொருள் குறித்த அறிக்கை வாசித்தார். துணை சேர்மன் சேகர், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மனோகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரிகரசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினர்.இதில், கடந்த ஆண்டைவிட ஆவின் பொருட்களை அதிகளவில் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உதவி பொது மேலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE