விழுப்புரம்,; தமிழக முதல்வர் மற்றும் பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி பேசிவரும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதியை கண்டித்து விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பாக்கியலட்சுமி வரவேற்றார். மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் அற்புதவேல், செயலாளர் முருகவேல், முன்னாள் கவுன்சிலர் செங்குட்டுவன், நகர துணை செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தனர்.மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பசுபதி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் முரளி ரகுராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமது ெஷரீப், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ் கண்டன உரையாற்றினர்.இதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதியை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் கதிரவன், மாவட்ட துணை தலைவர் வேலவன், மாவட்ட மருத்துவரணி கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, ராமதாஸ், முருகன், ராஜா, கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலுார் மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், நகர கூட்டுறவு வங்கி தலைவர்கள் தங்கசேகர், சேகர், பேரூராட்சி செயலாளர் சங்கரலிங்கம், ஜெ.பேரவை நகர செயலாளர் கோல்டு சேகர், நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குமரன், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்செல்வி மற்றும் நிர்வாகிகள் விஜயன், பொன்மலர் தயாளன், நடராஜன், ரூபன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE