ரிஷிவந்தியம்; மாவட்டத்தின் பெரிய பரப்பளவு கொண்ட சீர்ப்பனந்தல் ஏரி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.ரிஷிவந்தியம் அடுத்த சீர்ப்பனந்தல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. மாவட்டத்தில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட ஏரிகளில் சீர்ப்பனந்தல் ஏரியும் ஒன்றாகும்.கானாங்காடு, தொழுவந்தாங்கல், பெரியக்கொள்ளியூர் ஆகிய ஏரிகளில் இருந்து சீர்ப்பனந்தல் ஏரிக்கு தண்ணீர் வரும் வகையில் வரத்து வாய்க்கால் உள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால், மூன்று ஏரிகளும் நிரம்பி, சீர்ப்பனந்தல் ஏரிக்கு தண்ணீர் வந்தது. கடந்த 8 ம் தேதி சீர்ப்பனந்தல் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் வெளியேறியது.தொடர்ந்து,5நாட்களாக உபரிநீர் வெளியேறி எடையூர் ஏரிக்கு சென்று அங்கிருந்து மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE