சிதம்பரம்; தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை, பவழக்கடை தெருவைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது குடிசை வீடு எரிந்து சேதமானது.அதனைத் தொடர்ந்து கடலுார் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தீ விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார்.குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சேதுமாதவன், ஊராட்சி தலைவர் ஜெயசித்ரா, கிளைச் செயலாளர் சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE