விருத்தாசலம்; விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் 15 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் மல்டி லெவல் குடோன் கட்டுமானப் பணியை, வேளாண் வணிக இயக்குனர் பார்வையிட்டார்.விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு சீசன் காலங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வேளாண் விளை பொருட்கள் வரும்போது, அவற்றை பாதுகாத்து கையாள்வதில் சிரமம் ஏற்பட்டது.இதனைத் தவிர்க்க, மத்திய அரசின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 15 கோடி ரூபாயில், லிப்ட் வசதியுடன் கூடிய மல்டி லெவல் குடோன் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் 4 ஆயிரம் மெட்ரிக் டன் மூட்டைகளை சேமித்து, எளிதில் கையாள முடியும்.இதன் கட்டுமானப் பணியை சென்னை வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை இயக்குனர் முரளிதரன் பார்வையிட்டார்.அப்போது, கமிட்டி செயல்பாடு, விளைபொருட்கள் வருகை, இ-நாம் திட்ட பயன்பாடு குறித்தும் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.கமிட்டி செயலர் பாலசுப்ரமணியன், துணை இயக்குனர் பிரேம்சாந்தி, உதவி செயற்பொறியாளர் லட்சுமிகாந்தன், உதவி இயக்குனர்கள் விஜயகுமார், சுதமதி, கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி உட்பட வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE