சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
கடலுார்; முதல்வர் மற்றும் துணை முதல்வரை விமர்சித்து பேசிய, தி.மு.க., இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதியை கண்டித்து, கடலுாரில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் குமார், ஜெ., பேரவைச் செயலாளர்

கடலுார்; முதல்வர் மற்றும் துணை முதல்வரை விமர்சித்து பேசிய, தி.மு.க., இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதியை கண்டித்து, கடலுாரில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் குமார், ஜெ., பேரவைச் செயலாளர் காமராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் வினோத், நகர துணைச் செயலாளர் கந்தன், மாவட்ட இணைச் செயலாளர் உமாமகேஸ்வரி பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் பக்கிரி, மாணவரணி கலையரசன், மீனவரணி தங்கமணி உட்பட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலம்விருத்தாசலத்தில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.கலைச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், ஜெ., பேரவை மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் சந்திரகுமார், தலைமைக் கழக நிர்வாகி முருகுமணி முன்னிலை வகித்தனர்.முன்னாள் சேர்மன் அருளழகன், ஐ.டி., அணி மண்டல துணைச் செயலாளர் அருண், பாசறை மாவட்டச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள், சேர்மன்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X